Thursday, November 28, 2013

கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!! பசலைக் கீரை: பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். பாதாம்: பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும். சிக்கன்: கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும். அஸ்பாரகஸ்: கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும். வெண்டைக்காய்: பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம். ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும். ப்ராக்கோலி: சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். முட்டை: முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது. சால்மன் பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன. தயிர்: பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.

Wednesday, September 4, 2013

வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்.


"அழகானவர்கள்" என்று பேரெடுக்க ஆசைப்படாத மனிதர்களே உலகில் இல்லை. அழகிற்கு ஒரு ஆபத்து என்றால் சிலர் வாழ்க்கையே வெறுத்து விடுவார்கள்.


"வெண்புள்ளி" நோயால் எந்த ஊனமும் இல்லை என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகி விடுவார்கள். மேலும் மனதிற்குள் அழுவது, சிலருக்கு கைவந்த கலை.


"உடல் நோய் உடலை மட்டும் வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும்".



சிகிச்சை முறை:-

“காலையில் வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்து இலை ஒரு கை பிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கி வரவேண்டும்.


“நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும்.


பத்தியம்:- "வெள்ளை சர்க்கரையை (White Sugar) எக்காரணம் கொண்டும் சாப்பிடக்கூடாது"...


{அனுபவப்பட்டவர்களின் கட்டுரையை சுருக்கி சிறிதாக்கி பதிந்துள்ளேன். இந்த நோயால் பாதிக்கப்பட்ட யாருக்கேனும் உபயோகமாக இருக்குமே என்ற நோக்கத்தில்.}...

Saturday, July 27, 2013

சர்க்கரை நோய் தீர்க்கும் உணவு முறை

பொதுவாக 35 வயது வரை உணவில் எந்தக் கட்டுப்பாடும் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவரவர் வாழும் சூழ்நிலை, உத்தியோகம், பணி இவற்றைப் பொறுத்து தங்களுக்கு ஒத்து வரக் கூடிய, தங்களுக்குப் பிடித்த எந்த உணவையும் சாப்பிட்டு வரலாம். ஹோட்டல், விடுதிகள் போன்ற வெளியிடங்களைத் தவிர்த்து தாமே சமைத்து உண்ணுதல் நலம். அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்றுக்காக காலியாக வைத்திருத்தல் என்னும் உணவுப் பழக்கம் எக்காலத்திற்கும், யாவர்க்கும் பொருந்தி வரக் கூடிய ஓர் ஆரோக்யமான உணவுப் பழக்கமாகும்.

35 வயதிற்குப் பின் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்ளுதல் அவசியம்.
அரிசியில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச் சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களை மிகவும் பாதிப்பதால் ஸ்டார்ச் குறைவாக உள்ள கோதுமையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இரவு உணவு கோதுமை சப்பாத்தியாக, கோதுமை தோசையாக இருத்தல் நலம். சர்க்கரையின் அளவைப் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். 50 வயதிற்குப் பின் சர்க்கரையை அறவே தவிர்த்து விட வேண்டும். 40 வயது முதல் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இதனால் மூட்டு வலி, ஈரல் வீக்கம் போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் முற்றிய நிலையிலிருந்தால் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் அரிசி சாதத்தைத் தவிர்த்து கோதுமை உணவை மட்டுமே ஏற்க வேண்டும்.

ஆரம்ப நிலையிலுள்ள சர்க்கரை நோயை சரியான உணவுப் பழக்கத்தால் எளிதில் குணமாக்கி விடலாம் என்பது உண்மையே. இவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு அருகம்புல் உருண்டையை வாயில் போட்டு ஒரு டம்ளர் நீர் அருந்தவும்.

அருகம்புல் உருண்டை எப்படி செய்வது?

வேர், தண்டு நீக்கிய அருகம்புல்லைச் சேகரித்து அம்மியில் வைத்து நன்றாக அரைக்கவும். அத்துடன் நீர் சேர்க்காமல் தேவையான அளவு வடிகஞ்சியை ஊற்றி நைசாக அரைக்கவும். அருகம்புல்லை கல் அம்மி, ஆட்டுக்கல்லில்தான் அரைக்க வேண்டும். மின்சார மிக்சிகளைப் பயன்படுத்தக் கூடாது. அருகம்புல் விழுதான பதத்திற்கு வந்தவுடன் அதை வழித்தெடுத்து, உருண்டையாக உருட்டி ஒரு வெள்ளை வேட்டியில் அந்த உருண்டைகளை வைத்து நன்றாக வெயியில் காய வைக்கவும்.

சர்க்கரை நோய் தீர்க்கும் ஆராக் கீரை

அருகம்புல் உருண்டையில் உள்ள ஈரப் பதம் நன்றாகக் காயும் வரை தேவையான நாட்கள் தொடர்ந்து வெயிலில் காய வைக்கவும். நன்றாகக் காய்ந்தவுடன் ஒரு கண்ணாடி பாட்டிலில் அல்லது பீங்கான் பாத்திரத்தில் அருகம்புல் உருண்டைகளைப் போட்டு பத்திரப்படுத்தி வைக்கவும். இப்படி தயார் செய்யப்பட்ட அருகம்புல் உருண்டைகளை தினமும் ஒரு உருண்டை வெறும் வயிற்றில் உண்டு ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் ஆரம்பி நிலையிலுள்ள சர்க்கரை வியாதி குணமாகும். முற்றிய நிலையிலுள்ள நோயின் கடுமை தணியும்.

இரண்டாவதாக, இரவில் அரிசி சாதத்தில் நீர் ஊற்றி வைத்திருந்து காலையில் (பழைய) சாதத்தில் உள்ள நீரை வடித்து விட்டு உண்பதால் சாதத்தில் உள்ள பெரும்பான்மையான ஸ்டார்ச் சத்து நீர் மூலம் வெளியேறி விடும். இந்த சாதத்தை நாள் முழுவதும் சாம்பார், ரசம், மோர் இவற்றை சேர்த்து உண்ணலாம். இதனால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகாது.

மூன்றாவதாக, நீர் ஆரை என்ற ஒரு கீரை உண்டு. வயல் வரப்புகளில், வாய்க்கால்களில் நீர் தொடர்ந்து இடங்களில் முளைத்திருக்கும். நாலு இதழ்கள் கொண்டது. இந்த ஆராக்கீரையைச் சமைத்து தினந்தோறும் உண்ண வேண்டும். பசுவிற்கும் ஒரு கைப்பிடி ஆராக் கீரையை சிறிதளவு வெல்லத்துடன் சேர்த்துக் கொடுத்தில் மிகவும் துரிதமான பலன்களைக் கொடுக்கும். ஆராக் கீரையைப் பெற இயலாதவர்கள் தினமும் ஒரு கட்டு அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு அளித்து வரவும். இந்த உணவு முறையையும், தான முறையையும் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால் மிக எளிதில் சர்க்கரை வியாதியின் துன்பத்திலிருந்து மீளலாம். இதய நோய்கள் அகற்றும் உணவு முறை.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கொழுப்பைக் குறையுங்கள்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கொழுப்பைக் குறையுங்கள்

இன்றைய வாழ்க்கைமுறையில் சர்க்கரை உபாதையால் அவதிப்படுபவர்களைவிட "கொழுப்பு' உடலில் அதிகம் சேர்ந்து துன்பப்படுபவர்களே அதிக அளவில் காணப்படுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? எப்படி இதை நீக்குவது?

குடலில் பிசுபிசுப்பை உண்டாக்கி, உட்புற தாதுக்களில் அதைப் பரப்பிவிடும் தன்மை கொண்ட கெட்டியான புளித்த தயிர், வெல்லப்பாகு, கரும்புச்சாறு, சாக்லெட் வகையாறாக்கள், க்ரில் சிக்கன், எண்ணெய்ப் பதார்த்தங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும், எளிதில் செரிக்காத மைதா மாவினால் உண்டாக்கிய உணவுப் பண்டங்கள், சூடாக்காமல் அப்படியே ப்ரட்டை பட்டர் ஜாம் சாண்ட்விச் என்ற வகையில் சாப்பிட்டு மேலே பால், டீ, காபி குடிப்பது, இவை போன்றவற்றைச் சாப்பிட்டுவிட்டு பகலில் படுத்துறங்குவது ஆகியவற்றைச் செய்தால் "மாம்ஸவஹஸ்ரோதஸ்', அதாவது மாமிச தாதுவை உடலில் வளர்ச்சியடைய உதவும் குழாயானது கெட்டுவிடுவதாக சரகர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். அதுபோலவே, உடற் பயிற்சி எதுவுமில்லாமல் எந்நேரமும் உட்கார்ந்திருத்தல் அல்லது படுத்திருத்தல், பகல் தூக்கம், கொழுப்புள்ள பண்டங்களை அதிகம் சாப்பிட்டு, பிராந்தி, விஸ்கி, ரம், வைன், பீர் போன்ற மதுபான வகைகளைச் சாப்பிடுதல் ஆகியவற்றால் "மேதோவஹஸ்ரோதஸ்' அதாவது சதைக்கு ஊட்டம் தரக்கூடிய குழாய்ப் பகுதியானது கெட்டு விடுகிறது.

இப்படி மாமிச - மேதோவஹஸ்ரோதஸýகளைக் கெடுத்துக் கொண்டால், உடலில் கொழுப்பின் தேக்கம் கூடுகிறது. இந்தத் தேக்கம் குழாய் அடைப்புகளுக்குக் காரணமாகிறது. குழாய்களின் வழியாக வெளியேற வேண்டிய வஸ்துவின் வெளியேற்றம் அதிக அளவானாலோ, அல்லது தடைபட்டாலோ, குழாய்களில் முடிச்சுகள் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஒரு குழாயின் வழியாக வெளியேறினாலோ அவை ஒரு குழாய் உடலில் கெட்டுப் போய்விட்டது என்பதற்கான அறிகுறிகளாகும்.

வயலில் நெற்பயிர் செழிப்பாக வளர்வதற்கு பம்ப் செட் வழியாகத் தண்ணீர் நிரப்புவதை நீங்கள் பார்த்திருக்கலாம். தண்ணீரை அதிகம் தேக்கினால் பயிர் அழுகிவிடும் என்பதற்காக வரப்பு ஓரம் ஓர் ஓட்டையைப் போட்டு வெளியேற்றுவார்கள். இந்த உதாரணம் மனித உடலுக்கும் பொருந்தும். வயல் எனும் உடலில், நெற்பயிர் எனும் உயிரைக் காப்பதற்காக, தண்ணீர் எனும் கொழுப்பைச் சீரான அளவில் சேர்த்தால், உடல் செழிப்பாக இருக்கும். வாய், ஆசனவாய் எனும் ஓட்டை வழியாக அதிக அளவில் சேர்ந்த கொழுப்பை நீராக்கி வெளியேற்றினால் அதுவே வரப்பு ஓரம் போடப்பட்ட ஓட்டைக்கு ஒப்பிடலாம்.

ஆக கொழுப்பை உருவாக்கக் காரணமாகிய நிலம் மற்றும் நீரின் ஆதிக்க பூதங்களாகிய உணவுப் பொருட்களின் நேர் எதிரான தன்மை கொண்ட நெருப்பு, காற்று, ஆகாயம் கொண்ட உணவு மற்றும் மருந்துகளால் உருக்கி வெளிக் கொணருவதே சிறந்த சிகிச்சை முறையாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

வாழைப்பூ, பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், குடை மிளகாய், தக்காளி, பாகற்காய், கத்தரிக்காய், புடலங்காய், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், பீன்ஸ், வெண்டைக்காய், அவரைக்காய், காலிஃபிளவர், வாழைத்தண்டு, கோவைக்காய், வெள்ளைப் பூசணி, கொத்தவரங்காய், சீமைக் கத்தரிக்காய், பப்பாளி, வெங்காயம், கொத்துமல்லி, புதினா, கொண்டைக் கடலை, பாசிப் பயறு, நெல்லிக்காய், மாதுளம்பழம், நாவல் பழம், கொய்யாக்காய், எலுமிச்சம்பழம், கோதுமை, கேழ்வரகு, சோளம், கம்பு, தேயிலைத் தண்ணீர், வெந்தயம், வெண்ணெய் நீக்கிய மோர், வடிகட்டிய காய்கறி சூப் போன்றவற்றைக் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்கள் அளவாகச் சாப்பிடலாம்.

பேரீச்சை, வாழைப்பழம், சப்போட்டா, அன்னாசி, மலைவாழை, சீத்தாப்பழம், மாம்பழம், பலா, உலர்ந்த பழங்கள், பீட்ரூட், கேரட், உருளைக் கிழங்கு, மரவள்ளி, சேப்பங்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி, கருணைக் கிழங்கு, கொழுப்புமிக்க ஆட்டுக் கறி, முட்டையின் மஞ்சள் கரு, வறுத்த மீன், நுரையீரல், மூளை, தலைக்கறி, அப்பளம், வற்றல், வடாம், கரும்புச்சாறு, ஊறுகாய், பழரச பானங்கள், குளிர்பானம், இனிப்பு லேகியம், கருவாடு, பஞ்சாமிர்தம், கேக், ஜாம், பாயசம், சாக்லெட், க்ரீம் பிஸ்கெட், நெய், வனஸ்பதி, வெண்ணெய் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

சீரகம் - ஓமம் வெந்தெடுத்த தண்ணீர் குடிப்பது நல்லது. வாந்தி - பேதி சிகிச்சையை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி செய்வதே நல்லது.

Wednesday, July 24, 2013

ஹெர்ப்பீஸ் சிம்பிளக்ஸ் நோய் பற்றிய தகவல்கள்

உண்மையில் இதற்கும் பல்லி எச்சத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது ஒரு தொற்றுநோய்.Herpes simplex virus (HSV) என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.
ஹெர்பீஸ் வைரஸில் பல உப பிரிவுகள் உண்டு. கொப்பளிப்பான், நரம்புக் கொப்பளிப்பான், பாலியல் ஹெர்பீஸ் போன்றவை வேறு உதாரணங்களாகும்.

பொதுவாக இது நேரிடையாகத் தொற்றும்.
ஒரு முறை தொற்றினாலும் கிருமி நரம்புகளில் மறைந்திருந்து மீண்டும் மீண்டும் நோயை ஏற்படுத்த வல்லது.

இது பொதுவாக உதடுகளிலேயே ஏற்படுகிறது.

அதுவும் ஓரமாக, நடு உதட்டில் அல்ல. சிறு சிறு கொப்பளங்களின் கூட்டமாகத் தோன்றும்.

பல குழந்தைகளில் நாசித் தூரங்களிலும், வாயிற்கு உள்ளும் தோன்றும் .

அரிதாகக் கன்னங்களிலும் தோன்றுவதாகச் சொல்லப்படுகிறது.

முதன் முறை வரும்போது

முதல் முதலில் முக்கிமாகக் குழந்தைகளில் வரும்போது வேதனை இருக்கும்.

உதடுகளில் மட்டுமின்றி நாக்கிலும் வரலாம்.

கொப்பளங்கள் உடைந்து சிறிய புண்போலத் தோற்றமளிக்கும்.

பின் உலரத் தொடங்கும்போது மஞ்சள் ஆடைபோலப் பிடித்து, காய்ந்து மறையும். 3 முதல் 14 நாட்கள் வரை எடுக்கலாம். புண்கள் வாயிலிருக்கும்போது எச்சில் ஊறுவது அதிகமாகவும், வாய் மணமும் இருக்கும்.

கடுமையாக இருந்தால் மாத்திரம் குளிர், மெல்லிய காய்சல், காது வலி போன்றவை சேர்ந்து வரலாம்.

கட்டிளம் பருவத்தினரில் முதன் முதலில் வரும்போது வாய்ப் புண்களுக்கு பதிலாக தொண்டை வலியாக தோற்றலாம்.

மீண்டும் வரும்போது

திரும்ப வரும்போது முதல் முறை வந்ததுபோல கடுமையாகவோ வேதனை அளிப்பதாகவோ இருப்பதில்லை. வருடத்தில் ஓரிரு முறை வரலாம். ஒரு சிலருக்கு அடிக்கடி வருவதுண்டு. ஆயினும் முதல் வருடம் கழிந்த பின்னர் நீண்ட இடைவெளிகளிலேயே வரும்.

ஆனால் பெரும்பாலும் தடிமன் காய்ச்சல் வரும்போதுதான் அவ்வாறான கொப்பளங்கள் போடுவதுண்டு. இதனால் ஆங்கிலத்தில் இவற்றை cold sores என அழைப்பார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல இவை கடுமையாக இருப்பதில்லை. வந்தாலும் குறுகிய காலத்திற்குள் சுமார 5-6 நாட்களுக்குள் குணமாகிவிடும். பெரும்பாலும் முன்பு வந்த அதே இடத்தில் வருவதும் குறிப்பிடத்தக்கது.

குங்குமப்பூ அழகா? ஆரோக்கியமா?

ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப்பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே.

இதற்காகக் குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம் போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.

குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5-ஆம் மாதத்திலிருந்து 9-வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.

இது நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர். குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் முதல் 9 ஆம் மாதம் வரை கொடுப்பார்கள். இரத்த சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும்.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.
பிரசவித்த தாய்மார்களுக்கு
பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

மேலும் சில பயன்கள்:

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.
குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.

கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

உண்மையான குங்குமப்பூவைத் தேர்வு செய்து வாங்குவதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. உண்மையான குங்குமப்பூவைத் தேர்வு செய்து வாங்கிப் பயனடையலாம்

கர்ப்பிணி பெண்களுக்கு

சுக்கு பால் ( கர்ப்பிணி பெண்களுக்கு)

சுக்கு - ஐம்பது கிராம்
முழு பூண்டு - ஒன்று
தேங்காய் - அரை மூடி
பசும் பால் - ஒரு டம்ளர்
இஞ்சி - ஐம்பது கிராம்
தேன் - ஒரு மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - கால் டம்ளர்
பனை வெல்லம் - முக்கால் டம்ளர்

சுக்கை நல்ல காயவைத்து தட்டி மிக்ஸியில் பொடித்து மூன்றில் ஒரு பங்கு எடுத்தால் போதும். மீதியை அடுத்த இரு முறை காய்ச்ச வைத்து கொள்ளவும்.

பனை வெல்லத்தை இளக்கி வடிக்கட்டி வைக்கவும்.

பூண்டை உரித்து வேக வைத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
தேங்காயை அரைத்து பால் எடுத்து வைக்கவும்.

இஞ்சி சாறு எடுத்துக்கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கி சட்டியை காயவைத்து நல்லெண்ணெயை ஊற்றி கலக்கியதையும் சேர்த்து நல்ல கிளறி கிளறி கொதிக்க விடவும்.
பத்து பதினைந்து நிமிடம் கொதிக்கவிட்டு கடைசியில் தேன் கலந்து இறக்கி குடிக்கவும். சளி ஜலதோஷத்திற்கும் நல்லது.

Note:

கர்ப்பிணி பெண்கள் பிரசவ நேரத்தில் சுகப்பிரசவம் ஆக ஒன்பதாவது மாதம் பத்து நாட்களுக்கு பிறகு ஐம்பது கிராம் சுக்கை பொடித்து மூன்றாக பிரித்து ஐந்து நாளைக்கு ஒரு முறை இந்த பாலை காய்ச்சி குடிக்கவும். வயிற்றில் உள்ள வேண்டாத கேஸ் எல்லாம் வெளியாகிவிடும். ஒன்பதாம் மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் (மூன்று தடவை)தலைக்கு குளித்து விட்டு இதை காய்ச்சி குடித்தால் நல்லது.

கருக்கலைப்பிற்கு பின் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

சிலருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் கருக்கலைப்பு செய்தது அதிர்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். மேலும் தற்போது எதிர்பாராதவாறு கர்ப்பம் அடைந்துவிட்டால், அதனை மாத்திரைகள் மூலம் கலைத்துவிடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் கருத்தரித்த பெண்களின் உடல்நலத்திற்காக அறுவை சிகிச்சையின் மூலம் கருக்கலைப்பு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு அறுவை சிகிச்சையின் மூலம் மேற்கொள்ளும் கருக்கலைப்பு செய்த பின்னர் பெண்கள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாவார்கள்.

இதற்காக பயப்பட வேண்டாம். ஏனெனில் இது பொதுவான ஒரு பிரச்சனை தான். இவ்வாறு அறுவை சிகிச்சைளின் மூலம் கருக்கலைப்பு நடந்த பின்னர் மலச்சிக்கல் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. இப்போது அந்த காரணங்கள் என்னவென்று கீழே பார்ப்போம்.

கருக்கலைப்பிற்கு பின் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

* திடீரென்று கருக்கலைப்பு நடந்தால், கருப்பையில் உள்ள சிசு மட்டும் தான் வெளியேற்றப்படுமே தவிர, கர்ப்பத்திற்கு வழிவகுக்கும் ஹார்மோன்களானது உடனே செயல்பாட்டை நிறுத்தாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இதனால் கர்ப்பத்தின் போது சந்திக்கக்கூடிய மலச்சிக்கல் பிரச்சனை, கருக்கலைப்பிற்கு பின் ஏற்படுகிறது. ஆனால் நாளடைவில் அந்த பிரச்சனை குணமாகிவிடும்.

* பொதுவாக அறுவை சிகிச்சையின் மூலம் உடலின் மேற்புறத்தில் அதிர்ச்சிகள் ஏற்படும். ஆனால் வயிற்றில் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சையின் போது, அடிவயிற்றில் கடுமையான அதிர்ச்சி ஏற்படும். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின் அடிவயிற்றில் உள்ள தசைகளானது அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருப்பதால், குடலியக்கத்தின் செயல்பாடானது குறைந்து, மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.

* கருக்கலைப்பு நடந்தால், சிறிது நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும். இந்த நேரத்தில் அதிகமாக வேலை செய்யக்கூடாது. இவ்வாறு வேலை செய்யாமல் இருப்பதால், உடலின் மெட்டபாலிசமானது குறைந்து, மலச்சிக்கலை ஏற்படுத்தும். ஆனால் மலச்சிக்கல் ஏற்படுகிறது என்பதற்காக, உடனே எழுந்து வேலைகளை செய்யாமல், முடிந்த அளவு ஓய்வு எடுப்பதே நல்லது.

* அறுவை சிகிச்சையின் போது அதிகப்படியான இரத்தத்தை இழக்க நேரிடும். இதனால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். ஆகவே மருத்துவர்கள் உடலில் இரத்தத்தை அதிகரிப்பதற்கு, மருந்துகளைக் கொடுப்பார்கள். ஆகவே இந்த மருந்துகளை உட்கொள்வதால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. இவையே அறுவை சிகிச்சையின் மூலம் கருக்கலைப்பு செய்த பின், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பதற்கான காரணங்கள். வேண்டுமெனில் இத்தகைய மலச்சிக்கலில் இருந்து விடுபட, நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ளலாம்.

Sunday, July 21, 2013

பெண்களுக்கு...

பெண்களுக்கு...

ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது.

திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம்.

திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும்.

அதற்கான 6 படிகள்..

. ஆரோக்கியமாக இருங்கள் *

முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்

. சரியான விதத்தில் சாப்பிடுங்கள் *

மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச்

சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். *

பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.

தீய பழக்கங்கள் கூடாது *

புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும்
உடம்பைக் காக்கும்

. *சுறுசுறுப்பான

ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

சரியான நேரம் *

ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம்

. *பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும். பாலியல் அறிவு அவசியம் *

படுக்கையறை உறவு

என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும். உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்

*கர்ப்பம் தரிக்கும் பெண்

உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும்.

*குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

எந்த மருந்தை உட்கொண்டால் எவ் உறுப்புக்கள் பாதிப்படையும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்

எந்த மருந்தை உட்கொண்டால் எவ் உறுப்புக்கள் பாதிப்படையும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள் !!!

இன்று மருந்துகள் என்னும் பெயரில் நாம் எடுக்கும் விஷங்கள் எந்த எந்த உறுப்புகளை கெடுக்கிறது என்பதனை பட்டியல் இட்டு வெளியிட்டுள்ளனர் ஆராய்சியாளா்கள். இதனை பார்த்த பின்பும் நீங்கள் மருந்துகள் உண்டால் அதற்கு பெயர் நிச்சயம் அறியாமை அன்றி வேறொன்றும் இல்லை என்றும் தமது பதிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர்.

ரசாயன நஞ்சுகளால் பாதிப்படையும் பகுதிகள் :

அம்மோனியம் சல்பேட் – வயிறு, குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல விஷம்

பீட்டா பிராபியோலாக்டோன் – கல்லீரல், வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும். நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தும்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈஸ்ட் கண்டறியப்படவில்லை

விலங்கு, பாக்டீரிய வைரஸ் டி.என்.ஏ மரபணுக்களில் சிதைவை ஏற்படுத்தும்

லாட்டக்ஸ் ரப்பர் – திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு

எம்.எஸ்.ஜி – பிறவிக்கோளாறு மற்றும் ஒவ்வாமை

அலுமினியம் – அலிமியர்ஸ் நோய், டிமென்ட்சியா, வலிப்பு, கோமா

ஃபார்மால்டிஹைட் – மூளை மற்றும் குடல் புற்றுநோய்

பாலிசோர்பேட் 60 – நிரூபிக்கப்பட்ட புற்று நோய் காரணி

டிரைபுடைல் பாஸ்பேட் – சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு

ஜெலடின் – ஒவ்வாமை

ஜெந்தாமைசின் சல்பேட் மற்றும் பாலிமைக்சின் பி – ஒவ்வாமை

பாதரசம் – வரலாற்றிலேயே கொடிய விஷமாகக் குறிப்பிடப்படுவது. மூளை, நரம்பு பாதிப்பை ஏற்படுத்தும். தொப்பூழ் கொடி வழியாகக் கருவில் வளரும் சிசுவை அடையும்

நியோமைசின் சல்பேட் – சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும், வலிப்பு மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டை ஏற்படுத்தும்

பினால் (கார்பாலிக் அமிலம்)/

எதிலின்கிளைகால்/ பினோஜைதனால் – செல்களை பாதிக்கும் விஷம்

குளுதரால்டிஹைட் – பிறவிகுறைபாடுகளை ஏற்படுத்தும்

போரக்ஸ் – எறும்புகளைக் கொல்லப் பயன்படும் விஷம்…!

இந்த விஷங்களை கொண்டு நோய்களை குணப்படுத்துவதாக கூறுவது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை…

வெண்மையான பற்களுக்கு. . . வீட்டிலேயே பொருளிருக்கு.

வெண்மையான பற்களுக்கு. . . வீட்டிலேயே பொருளிருக்கு. . .

அழகான புன்னகையால் ஆயிரம் இதயங்களை கவர முடியும். ஆகவே அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அத்தகைய வெள்ளையான பற் களை பெறுவதற்கு நிறைய முயற்சிக ளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் பற்களை பொலிவோடு வைப் பத ற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண் டு முதல் மூன்று முறை பற்களை துலக் குவோம். இருப்பினும் ஏதாவது உணவுக ளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக் கறைகள் படிந்து மற் றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன. மேலும் சில நேரங்களில் அத்தகைய கறைகளால் வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும். எனவே இத்தகைய பிரச்ச னைகளைப் போக்கி, பற்களின் இருக் குகளில் சிக்கிக் கொள்ளும் பொருட்க ளை தவிர்க்கவும், வாய் துர்நாற்றத் தையும் நீக்கவும், அத்தகைய உணவுக ளை சாப்பிடுவதை தவிர்த்து, பற்களுக் கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக் கும். மேலும் ஒரு சில வீட்டுப்பொருட்களைப் பயன்படுத்தி, பற்க ளை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச் சென்று வெண்மையுட னும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்ன வென்று பார்ப்போமா !!!
எலுமிச்சை எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண் மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சை யை உப்பில் தொட்டு தேய் க்க வேண்டும்.
கடுகு எண்ணெய்

பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண் ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக் கும்.

சாம்பல்

அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக் கும்.

உப்பு

அனைவருக்குமே உப்பு பற்களை வெள் ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற் களை துலக்கினால் பற்களை வெள்ளை யாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னு ம்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்ப வர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற் களை தேய்த்தால், பற்கள் மின்னுவ தோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

வினிகர்

தினமும் வினிகரை நீருடன் சேர்த்து கலந்து வாயில் விட்டு, கொப் பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கி, பற்களில் உள்ள மஞ்சள் நிறக் கறையும் நீங்கும்.

கிராம்பு எண்ணெய்

ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிரா ம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துல க்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

வேப்பங்குச்சி

பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இத னை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக் கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.

பிரியாணி இலை

பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்

சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!

நாவல் பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச பழம். எங்க ஊருல நவ்வாப்பழம்னு பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆத்தோரமா வளந்திருக்குற நாவல் மரங்கள்ல போட்டி போட...