X

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… !
 சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?
நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார்!

கீரையில் உள்ள சத்துக்கள்

1) வெந்தயக் கீரை : கால்ஷியம் 395 கிராம், வைட்டமின் 2340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93மி.கி. உள்ளன. பார்வைக் கோளாறு ரத்த சோகையைப் போக்கும். (கீரைகளை நன்கு கழுவவும்)
2) புளிச்ச கீரை : இரும்புச் சத்து 2.28 மி.கி. வைட்டமின் 2898 மைக்ரோ கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். (கீரைகள் சமைத்த நீரை கீழே ஊற்றாமல் சாம்பார், சூப் அல்லது மாவு பிசையப் பயன்படுத்தவும்)
3) முட்டைகோஸ் : வைட்டமின் சி 124 மி.கி. வைட்டமின் , ·போலிக் அமிலம், வைட்டமின் பி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை சிறிதளவு உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவும்.
4) முருங்கைக் கீரை : வைட்டமின் 6780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்ஷியம் 440மி.கி. பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி ஆகியவை உள்ளன. வைட்டமின் குறைவினால் பார்வைக் கோளாறு மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். எனவே முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
5) கறிவேப்பிலை : வைட்டமின்ஏ 75000 மைக்ரோகிராம் கால்ஷியம் 830 மி.கி. ·போலிக் அமிலம் 93.9 மைக்ரோ கிராம் மற்றும் வைட்டமின் பி. சி. சிறிதளவு உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் அதிகம். பார்வைக் கோளாறுகளைக் தடுக்கும்.
6) புதினா கீரை : போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்ஷியம் 200மி.கி. இரும்புச் சத்து 15.6 மி.கி. வைட்டமின்கள் .பி.சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்க வல்லது.
 7) கொத்தமல்லி : கால்ஷியம் 184 மி.கி. இரும்பு 1042 மி.கி, வைட்டமின் 8918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி.சி, உள்ளன. பார்வைக்கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்க வல்லது. மணத்தக்காளி: இரும்புச் சத்து 20.5 மி.கி., கால்ஷியம் 410 மி.கி., வைட்டமின் பி.சி உள்ளன. வாய்ப்புண் ஏற்படுவதைக் தடுக்கும்.

நம் உடல் நலத்துக்கு ஏற்ப இயற்கை மருத்துவ குறிப்புகள்

உடலில் எந்த உறுப்பில் சுளுக்கு ஏற்பட்டாலும் உடனே நிவாரணம் பெற, சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெயைக் காய வைத்து, அதில் சிறிது மிளகுத்தூளையும், கற்பூரத்தையும் போட்டுக் கலக்கி, சுளுக்குள்ள இடத்தில் பூசினால் சுளுக்கு போய்விடும். 

* வயிற்றில் சங்கடமா? அரை தம்ளர் மோரில் சிறிது தண்ணீர் விட்டு துளி உப்பும் கொஞ்சம் பெருங்காயப்பொடியும், அரை தேக்கரண்டி சர்க்கரையும் போட்டுக் கலக்கிக் குடித்தால் போதும். அடுத்த அரை மணியில் முகம் பிரசன்ன வதனமாகிவிடும். 

* பெண்களுக்கு 40 வயதில் மாதவிடாய் பிரச்னை இருப்பது சகஜம். ராகியை மாவாக அரைத்து வைத்துக்கொண்டு காலையில் கஞ்சி வைத்து மோர், உப்பு சேர்த்து அல்லது பால் சர்க்கரை விட்டுக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உதிரப்போக்கு கட்டுப்படும். 

* 40 வயதுப் பெண்களுக்கு லேசான தலை சுற்றல் வரும். இதைத் தடுக்க சந்தனம், கொத்துமல்லி விதை, நெல்லி வற்றல் மூன்றையும் சம அளவில் சேர்த்து இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் குடித்தால் தலை சுற்றல் நிற்கும். 

* மாதவிலக்கின்போது ஏற்படும் வலியைக் குறைக்க கட்டிப் பெருங்காயத்தை நீரில் கெட்டியாகக் கரைத்து மடக் மடக் என்று குடித்துவிட வேண்டும். 

* வயிற்றுப் புண்ணினால் வரும் வயிற்று வலியாக இருந்தால் மிதமான சூடான வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் உடனே வலி குறையும்.

 * அதிகமான மது குடித்ததினால் உண்டான தலைவலி அல்லது அஜீரணத்தால் உண்டான தலைவலி எல்லாம் வெந்நீர் சாப்பிடுவதால் குணமடையும். 

* இஞ்சியைப் பல் வலிக்கும் இடத்தில் வைத்துக்கொண்டு இஞ்சிச்சாறு அதில் வரும்படி பல்லினால் அழுத்தமாக கடித்துக் கொண்டால் பல்வலி நிமிஷத்தில் மறைந்துவிடும். 

* "கேஸ்டிக் அல்சர்' தொந்தரவு உள்ளவர்கள் வயிறு சம்பந்தமான எந்தக் கஷ்டமாக இருந்தாலும் அதற்குத் தினம் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலைக் கொழுந்தை சாப்பிட வேண்டும். 

* வாய்ப் புண்ணிற்கு பச்சரிசி, பயத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி வெந்தயம், நிறைய பூண்டு உரித்துப் போட்டு குக்கரில் வைத்து வெந்தவுடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட வேண்டும். 

* பேதியோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட்டால் வெந்தயத்தை நன்றாக கறுப்பாக வறுத்து, நைஸôக பொடி செய்து ஒரு தேக்கரண்டி பொடியில் சிறிது தேன் விட்டுக் கலந்து உட்கொள்ள சரியாகிவிடும்.

 * திராட்சைப்பழமும், உலர்ந்த திராட்சையும் ஜீரண சக்தியை வலுப்படுத்தி குடல்புண், சிறுநீரகம் முதலியவற்றைச் சுத்தப்படுத்துகிறது. 

* மலச்சிக்கல் உடையவர்கள் இரவில் பச்சை வாழைப்பழம் சாப்பிடுவது உகந்தது.

வியர்வை நாற்றம் போக்க வழிமுறைகள்

மனிதனின் இயற்கை உபாதைகளில் ஒன்றாகவும் சிலருக்கு தர்மசங்கடத்தை தரக்கூடியதாகவும் இந்த வியர்வை நாற்றம் இருக்கிறது.

வியர்வை எவ்வாறு வருகிறது:
மனித உடலில் கிட்டத்தட்ட நாற்பது லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன. இவை சருமத்தின் அடிப்பகுதியில் கானப்படும். இந்த சுரப்பிகள் உடலின் நிலையையும் வெளிப்புற தட்பவெப்பத்தையும் பொறுத்து சுரக்கும். உடல் வளர்ச்சி அடையும் பருவங்களில் வியர்வை நாற்றம் அதிகமாக இருக்கும். தோலில் தினம் தினம் ஆயிரக்கணக்கான பழைய செல்கள் இறந்து புதிய செல்கள் வளர்கின்றன. இறந்த பழைய செல்கள் தோலோடு இருந்தால் அவை வாடை அடிக்கும்.
இதனால் உடலில் வியர்வை என்பது இயற்கையானதே.
உண்மையில் தூய்மையான உடலில் இருந்து வரும் வியர்வையில் நாற்றம் அதிகம் இருக்காது. ஆனால் உடலில் ஏதாவது நோய் இருந்தாலும், உணவு ஜீரணம் சரியாக இல்லாவிட்டாலும், மலஜலம் சரியாக வெளியேறாமல் இருந்தாலும் வரக்கூடிய வியர்வையில் நாற்றம் அதிகம் இருக்கும்.
வியர்வையை நிறுத்த இயலாது. ஆனால் வியர்வையால் ஏற்படும் நாற்றத்தை கீழ் உள்ள வழிமுறைகள் மூலம் குறைக்கலாம்.

வியர்வை நாற்றத்தை போக்க வழிமுறைகள்:
வியர்வை நாற்றத்திற்கு பல வகையான ஆங்கில மருந்துவகைகளும் இராசாயன பூச்சுகளும் இருக்கிறது. பொதுவாக அவ்வகை மருத்துவங்கள் பணத்தை பறிக்கும் நோக்கத்திலேயே உள்ளன.
இயற்கை மருத்துவமே உடலுக்கு நல்லது.
இந்திய ஆன்மிக உலகிலும் மருத்துவ உலகிலும் மிகப்பெரும் பங்காற்றுவது எலுமிச்சை. இது மிகப்பெரும் சக்தியும் மருத்தவ குணமும் உடையது என்பதாலேயே பெருமை பெருகிறது.
குளிக்கும் முன் அரைமணி நேரத்திற்கு முன் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து நசுக்கி அதன் சாறை உடலெங்கும் நன்றாக தேய்த்து விட்டு காத்திருக்கவும். அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு தினம்  செய்து வாருங்கள். இவ்வாறு குளிக்கும் போது சோப்பு தேவையில்லை. சோப்பு அழுக்கை மட்டுமல்ல எலுமிச்சையின் சக்தியையும் நீக்கிவிடும். இவ்வாறு எலுமிச்சை சாறு தேய்த்து குளித்து வந்தால் உடல் நாற்றம் நாளடைவில் நீங்க ஆரம்பிக்கும். எலுமிச்சை சாற்றை தலையிலும் தேய்க்கலாம். எந்த கெடுதலும் இல்லை.
ஜவ்வாது என்ற ஒரு பொருள் நாட்டு மருந்து கடைகளிலும் காதிகிராஃட் கடைகளிலும் கிடைக்கும். அதில் மிகவும் சிறிய அளவு எடுத்து நீர்வி்ட்டு குழைத்து தேகத்திலும் உள்ளே ஆடையிலும் தடவி விட்டால் வியர்வை நாற்றம் வந்தாலும் ஜவ்வாது வாசனையில் நாற்றம் தெரியாது. இது மிகப்பண்டைய நாற்றம் போக்கும் வாசனை முறை.
மீன்கள் அல்லது இறச்சி வகைகளை வைத்து பயன்படுத்திய பாத்திரங்களை கழுவி வைத்த பின்னும் பின்பு எப்போதாவது அதில் சுடுநீர் விட்டால் அதிலிருந்து அதே மீன் அல்லது இறச்சி வாடை அடிப்பதை அறிந்திருப்பீர்கள். இது நம் உடலுக்கும் பொருந்தும். சிலவகை மீன்களை அல்லது இறச்சி வகைகளை சாப்பிட்ட பின்பு பல மணி நேரம் கழிந்தாலும் சுடுநீர் குடித்தால் அப்போது வரும் வியர்வை மிகவும் நாற்றமாக இருப்பதை காணலாம். வியர்வை நாற்றம் அதிகமாக இருந்தால் அவ்வகை உணவுப்பொருட்களை கொஞ்ச காலம் நிறுத்தி வைக்கலாம். வாழைப் பழங்களை அதிக அளவு சாப்பிட்டு வரவும்.
உடலில் உண்ட உணவு செரிப்பதில் கோளாறு இருந்தாலும் வரும் வியர்வையில் நாற்றம் அதிகமாக இருக்கும். அடிக்கடி மலம் மற்றும் சிறுநீரை கழித்து உணவுப்பாதையை தூய்மையாக வைத்துக்கொள்ளவும். இதனால் வியர்வையின் அளவும் நாற்றமும் குறைய ஆரம்பிக்கும். மலஜலம் கழிப்பதில் சிக்கல் இருந்தால் பழங்களை அதிகம் சாப்பிடலாம்.
மாதத்திற்கு ஒரு நாளாவது வெறும் பழங்களையும் நீர் ஆகாரத்தையும் மட்டும் உண்டு பழகவும். இதனால் உடல் உணவுப்பாதை சுத்தமாகும். சளி இல்லாதவர்கள் உணவில் மோர் தயிர் அதிகம் சேர்க்கவும்.
அடிக்கடி சுத்தமான சந்தணம், அதிமதுரம் இவற்றை வாயில் போட்டு மெல்லலாம். கடைகளில் கிடைக்கும் சந்தணம் பளுப்பு நிறத்தில் இருக்கும். இது கலப்படமானது. உண்மையான சந்தணம் வெள்ளை நிறத்தில் இருக்கும். அதிமதுரம் வேர் மாதிரி இனிப்பாக இருக்கும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
ஆசிட் கலக்காத சுத்தமான பன்னீர் உடலுக்கு நல்லது.
சாதாரண நீர் அருந்துவதை விட சிறிது சீரகம் போட்டு சூடாக்கி ஆற வைத்தோ அல்லது சிறிது துளசி இலை போட்டு வைத்த குளிர்ந்த நீரையோ அருந்துவது மிகவும் நல்லது.

உள்ளி (சின்ன வெங்காயம்), வெங்காயம், பூண்டு (வெளுத்துள்ளி), இறச்சி, அதிக காரம் உப்பு மசாலா கலந்த உணவுப்பொருட்களை குறைக்கவும். இவை வியற்வை நாற்றத்தை அதிகப்படுத்தும்.
வியர்வை மிக அதிகமாக இருந்தால் தினம் இருமுறை குளிப்பதை வழக்கமாக கொள்ளவும். பல ஊர்களில் வாரம் ஒருமுறை மட்டுமே தலைக்கு குளிக்கும் பழக்கம் உள்ளது. இது மிகவும் தவறு.  நமது நாடு வெப்ப மண்டல மத்திய பகுதியில் இருப்பதால் தினமும் தலைக்கு குளிப்பது மிக நல்லது.
குளிப்பதோடு பழைய உடைகளை மாற்றிவிட்டு தூய்மையான புது உடைகளை போட்டுக்கொள்ளவும்.
நாற்றம் அதிகமாக இருந்தால் அடிக்கடி சுடுநீர்(டீ, காபி) குடிப்பதை தவிர்க்கலாம்.
சிலவகை ஆங்கில மருந்துகளை சாப்பிட்டிருந்தாலும் அதன் தாக்கத்தால் அப்போது வரும் வியர்வை நாற்றம் இருக்கலாம். சிறுநீரிலும் அதன் தாக்கம் தெரியும்.
சோப்பு போட்டு குளித்த பின் நன்றாக உடலை நீரால் கழுவிவிட்டு வெறும் உள்ளங்கையால் தோலில் அழுத்தமாய் தேய்த்தாலே அழுக்குகள் விலக ஆரம்பிக்கும்.
சாதாரண சோப்பை நிறுத்திவிட்டு மெடிமிக்ஸ், டெட்மசால் (மருந்து கடைகளில் கிடைக்கும்) போன்ற ஆண்றி பாக்ரீரியல் சோப்புகளை மட்டும் கொஞ்ச காலத்திற்கு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
வியர்வை சுரப்பிக்கும் பாலுணர்விற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. சிலருக்கு உடலுறவு கொண்ட நாட்களில் அல்லது தொடர்ந்த நாட்களில் வியர்வை நாற்றம் அதிகமாக இருக்கும்.
அடிக்கடி நீண்ட நேரம் குளிந்த நீரில் குளித்து உடல் சூட்டை தணிக்க முயலவும். வீட்டில் குளிப்பதை விட ஆறு, குளம், கடல் அருவி இவைகளில் குளிக்கும் போது இயற்கையாகவே உடல் சீக்கிரமாக தணிய ஆரம்பிக்கும்.

கடைசியாக நீங்கள் புகைபிடிக்கும் பழக்கம் உடைய ஆளாக இருந்தால் அதை உடனடியாக நிறுத்துங்கள்.

உணவுப்பழக்கத்தை சீர்படுத்தல், உடல் நோயை கண்டறிந்து தீர்க்க முயலுதல், உடலை எப்போதும் தூய்மையாகவும் குளிர்ச்சியாக வைத்திருக்க முயலுதல் இவற்றால் உடல் வியர்வையையும் அதனால் வரும் நாற்றத்தையும் தவிர்க்கலாம்.

உடல் எடையை அதிகரிக்க

இன்றைய மக்களுள் சிலர் எடை அதிகமாக உள்ளது என்பதற்காக அதை குறைக்க நிறைய முயற்சிகளை எடுக்கின்றனர். அதே சமயம் சிலர் எடை அதிகமாகவில்லை என்று அதற்காக பல முயற்சிகளை எடுக்கின்றனர்.
அவ்வாறு முயற்சி செய்யும் போது எல்லா உணவுகளையுமே சாப்பிடக் கூடாது.
உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் உணவுகளை சாப்பிட்டால் தான் உடல் எடை அதிகமாவது, குறைவது போன்றவை ஏற்படுவதோடு உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் இருக்கும்.
வேர்க்கடலை வெண்ணெய்
வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன் தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.
முட்டை
அனைவருக்குமே முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது என்பது தெரிந்தது தான். அத்தகைய முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைத்து, உடல் எடையும் அதிகரிக்கும்.
வெண்ணெய்
அனைவரும் வெண்ணெயை தினமும் சாப்பிட்டால் உடல் பருமனடையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் வெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் தான்.
ஆனால் தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது.
ஜூஸ்
உடல் ஆரோக்கியமாகவும், எடை அதிகரிக்கவும் சில பவுண்ட் உடலுக்கு தேவைப்படுகிறது. ஆகவே தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும்.
கோதுமை பிரட்
தானியங்களில் நிறைய கலோரிகள் உள்ளன. அதிலும் கோதுமையில் அதிகமாகவே உள்ளது. ஆகவே பிரட் வாங்கும் போது, கோதுமை பிரட்டை வாங்கி சாப்பிட்டால், ஆரோக்கியத்துடன் எடையும் கூடும்.
ஓட்ஸ்
காலையில் சாப்பிட ஓட்ஸ் மிகவும் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு. அதிலும் இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இதனால் உடலில் சீரான இரத்த ஓட்டம் இருப்பதோடு, உடலும் பருமனடையும்.
தயிர்
பழங்களை விட, தயிரில் 118 கலோரிகள் இருக்கின்றன. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமில்லை, குறைந்தது 100 கலோரிகளும் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.
உருளைக்கிழங்கு
கார்போஹைட்ரேட் மற்றும் காம்ப்ளக்ஸ் சுகர் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.

பப்பாளிக்காய்என்ன இருக்கு : விட்டமின் , கைபோ பாப்பைன் என்சைம்.
யாருக்கு நல்லது : மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க
விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.
யாருக்கு வேண்டாம் : கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.
பலன்கள் : சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.