Wednesday, December 11, 2013

நம் உடல் நலத்துக்கு ஏற்ப இயற்கை மருத்துவ குறிப்புகள்

உடலில் எந்த உறுப்பில் சுளுக்கு ஏற்பட்டாலும் உடனே நிவாரணம் பெற, சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெயைக் காய வைத்து, அதில் சிறிது மிளகுத்தூளையும், கற்பூரத்தையும் போட்டுக் கலக்கி, சுளுக்குள்ள இடத்தில் பூசினால் சுளுக்கு போய்விடும். 

* வயிற்றில் சங்கடமா? அரை தம்ளர் மோரில் சிறிது தண்ணீர் விட்டு துளி உப்பும் கொஞ்சம் பெருங்காயப்பொடியும், அரை தேக்கரண்டி சர்க்கரையும் போட்டுக் கலக்கிக் குடித்தால் போதும். அடுத்த அரை மணியில் முகம் பிரசன்ன வதனமாகிவிடும். 

* பெண்களுக்கு 40 வயதில் மாதவிடாய் பிரச்னை இருப்பது சகஜம். ராகியை மாவாக அரைத்து வைத்துக்கொண்டு காலையில் கஞ்சி வைத்து மோர், உப்பு சேர்த்து அல்லது பால் சர்க்கரை விட்டுக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உதிரப்போக்கு கட்டுப்படும். 

* 40 வயதுப் பெண்களுக்கு லேசான தலை சுற்றல் வரும். இதைத் தடுக்க சந்தனம், கொத்துமல்லி விதை, நெல்லி வற்றல் மூன்றையும் சம அளவில் சேர்த்து இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் குடித்தால் தலை சுற்றல் நிற்கும். 

* மாதவிலக்கின்போது ஏற்படும் வலியைக் குறைக்க கட்டிப் பெருங்காயத்தை நீரில் கெட்டியாகக் கரைத்து மடக் மடக் என்று குடித்துவிட வேண்டும். 

* வயிற்றுப் புண்ணினால் வரும் வயிற்று வலியாக இருந்தால் மிதமான சூடான வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் உடனே வலி குறையும்.

 * அதிகமான மது குடித்ததினால் உண்டான தலைவலி அல்லது அஜீரணத்தால் உண்டான தலைவலி எல்லாம் வெந்நீர் சாப்பிடுவதால் குணமடையும். 

* இஞ்சியைப் பல் வலிக்கும் இடத்தில் வைத்துக்கொண்டு இஞ்சிச்சாறு அதில் வரும்படி பல்லினால் அழுத்தமாக கடித்துக் கொண்டால் பல்வலி நிமிஷத்தில் மறைந்துவிடும். 

* "கேஸ்டிக் அல்சர்' தொந்தரவு உள்ளவர்கள் வயிறு சம்பந்தமான எந்தக் கஷ்டமாக இருந்தாலும் அதற்குத் தினம் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலைக் கொழுந்தை சாப்பிட வேண்டும். 

* வாய்ப் புண்ணிற்கு பச்சரிசி, பயத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி வெந்தயம், நிறைய பூண்டு உரித்துப் போட்டு குக்கரில் வைத்து வெந்தவுடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட வேண்டும். 

* பேதியோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட்டால் வெந்தயத்தை நன்றாக கறுப்பாக வறுத்து, நைஸôக பொடி செய்து ஒரு தேக்கரண்டி பொடியில் சிறிது தேன் விட்டுக் கலந்து உட்கொள்ள சரியாகிவிடும்.

 * திராட்சைப்பழமும், உலர்ந்த திராட்சையும் ஜீரண சக்தியை வலுப்படுத்தி குடல்புண், சிறுநீரகம் முதலியவற்றைச் சுத்தப்படுத்துகிறது. 

* மலச்சிக்கல் உடையவர்கள் இரவில் பச்சை வாழைப்பழம் சாப்பிடுவது உகந்தது.

No comments:

சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!

நாவல் பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச பழம். எங்க ஊருல நவ்வாப்பழம்னு பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆத்தோரமா வளந்திருக்குற நாவல் மரங்கள்ல போட்டி போட...