Sunday, July 21, 2013

வயதிற்கேற்றார் போல் நல்லா தூங்குங்க

தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான ஒன்று. நன்றாக தூங்கினால்தான் அடுத்த ஓட்டத்துக்கு நாம் நம்மை தயார் செய்து கொள்ள முடியும். ஆனால், பணம் பணம் என்று ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் 8 மணி நேர தூக்கம் என்பது பலராலும் இயலாத காரியம். தூங்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்க ஓடுகிறோம்.

24 மணி நேரமும் சம்பாதிக்க தயாராக இருக்கும் நாம் 8 மணி நேரம் தூக்கத்துக்கு ஒதுக்க ரொம்பவே கஷ்டப்படுறோம். இதனால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறோம். மன அழுத்தம், ரத்த அழுத்தம், கண் எரிச்சல், சோர்வு... ஹார்ட் அட்டாக் கூட வருமாம். அதனால இனிமே 8 மணி நேரம் தூங்குறதை தவிர்க்காதீங்க. அதுக்காக இதோ சில டிப்ஸ்...

குறிப்பிட்ட நேரத்தில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் அந்த நேரத்தில் கட்டாயம் தூங்க சென்று விட வேண்டும்.
பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். இது இரவு நேர தூக்கத்தை பாதிக்கும். எனவே, இரவில் மட்டுமே தூங்க வேண்டும். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 30 நிமிடம் என்ற கணக்கில் ஒருவாரத்துக்கு 5 முறையாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். தூங்குவதற்கு 2-3 மணி நேரத்துக்கு முன்பாகவே உடற்பயிற்சியை முடித்துவிட வேண்டும்.

எந்த சத்தமும், ஒலியும் பெட்ரூமில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். தெரு விளக்கு வெளிச்சம் கூட வரக்கூடாது. அப்படியே வந்தால் கனமான ஸ்கிரீன் துணியால் ஜன்னல்களை மூடி வையுங்கள். பெட்டில் அமர்ந்தபடி வேலை பார்ப்பது, டிவி பார்ப்பதை தவிர்க்கவும். பெட்ரூமில் டிவி இல்லாமல் இருப்பதே நல்லது.

தூங்குவதற்க 2 மணி நேரம் முன்பாகவே இரவு உணவை முடிப்பது நல்லது. ஆனாலும், பசியோடு தூங்க செல்லக் கூடாது. இரவு தூங்குவதற்கு முன் பாலுடன் தேன் கலந்து குடித்தால் நல்லது. இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்ச விஷயம்தானே என்று யோசிங்கிறீங்களா... இதனால எந்த பலனும் இல்லை என்று கருதி விடாதீர்கள்.

தொடர்ந்து 2, 3 வாரங்கள் கடைபிடியுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். சரியா தூங்கவில்லை என்றால், அது உங்கள் மனதையும் உடலையும் பாதிப்பதுடன் ஹார்ட் அட்டாக் ரேஞ்ச்சுக்கு கொண்டு போயிடும். அதனால உங்க உடல் நிலையை பாதுகாக்கக் கூடிய தூக்கத்தை அலட்சியப்படுத்தாதீங்க!

வயதிற்கேற்றார் போல் தூங்குங்கள்

வயது தூங்கும் நேரம்
2 மாத குழந்தை 12 - 18 மணி வரை
3 மாதம் - 1 வயது 14 - 15 மணி வரை
1 - 3 வயது 12 - 14 மணி வரை
3 - 5 வயது 11 - 13 மணி வரை
5 - 12 வயது 10 - 11 மணி வரை
12 - 18 வயது 8 - 10 மணி வரை
18 வயதுக்கு மேல் 7 - 9 மணி வரை

No comments:

சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!

நாவல் பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச பழம். எங்க ஊருல நவ்வாப்பழம்னு பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆத்தோரமா வளந்திருக்குற நாவல் மரங்கள்ல போட்டி போட...