இத்தாலி நாட்டில் உள்ள புளோரன்ஸ் பல்கலைக்கழக டாக்டர்கள், பெண்களின் செக்ஸ் ஆசை குறித்து ஆராய்ச்சி நடத்தினார்கள். நீண்டநாள் ஆய்வுக்குப்பிறகு சிவப்பு ஒயின் குடித்தால் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்த சோதனைக்காக 18 வயது முதல் 50 வயது வரை 800 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டனர்.
முதல் வகை பெண்களுக்கு தினமும் 2 டம்ளர் மற்றும் அதற்கு மேல் சிவப்பு ஒயின் கொடுக்கப்பட்டது. இரண்டாவது வகை பெண்கள் தினமும் ஒரே ஒரு கிளாஸ் சிவப்பு ஒயின் குடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மூன்றாவது வகைப்பெண்கள் மது எதுவும் குடிக்காமல் இருந்தனர்.
சமீபத்தில் இந்த 3 வகை பெண்களிடம் 19 வகையான கேள்விகள் கேட்கப்பட்டன. இதன் மூலம் தினமும் 2 டம்ளர் சிவப்பு ஒயின் குடித்த பெண்கள் அதிக செக்ஸ் ஆசை கொண்ட பெண்களாக மாறி இருப்பது தெரிந்தது.
தினமும் ஒரு டம்ளர் சிவப்பு ஒயின் குடித்த பெண்கள் செக்ஸ் ஆசையில் ஓரளவு ஈடுபாட்டுடன் இருந்தனர். முழுமையான மதுவிலக்குடன் இருந்த பெண்களுக்கு செக்ஸ் ஆசை எழவில்லை என்பது தெரியவந்தது.
சிவப்பு ஒயின்கள் உடம்பில் ரத்த ஓட்டத்தை வழக்கத்தை விட அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. இதுதான் செக்ஸ் ஆசையைத்தூண்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!
நாவல் பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச பழம். எங்க ஊருல நவ்வாப்பழம்னு பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆத்தோரமா வளந்திருக்குற நாவல் மரங்கள்ல போட்டி போட...
-
நாவல் பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச பழம். எங்க ஊருல நவ்வாப்பழம்னு பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆத்தோரமா வளந்திருக்குற நாவல் மரங்கள்ல போட்டி போட...
-
பொடுகு என்றால் என்ன ? தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கி...
No comments:
Post a Comment