Monday, July 26, 2010

நல்ல தூக்கம் எடையை குறைக்கும்

http://linoj.do.amஅதிக நேரம் தூங்கினால், எடை குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவ மையத்தில் சர்வதேச டாக்டர்கள் மற்றும் நிபுணர்கள் குழுவினர் நடத்திய ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வால்டர் ரீட் மருத்துவமனையை சேர்ந்த நர்ஸ்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதில், நன்றாக தூங்குவோரை விட, குறைந்த நேரம் தூங்குவோருக்கு எடை அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

குறைந்த நேரம் தூங்குவோருக்கு, பசி அதிகரித்து, அதிகளவில் உட்கொள்கின்றனர். வளர்சிதை மாற்றத்தின் போது, அவர்களின் எடை அதிகரிக்கிறது என்பது நிரூபணமானது.



"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து பாதுகாக்கும்
பால் சேர்க்காத "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

இத்தாலியின் லாகிலா பல்கலைக்கழகம், லிப்டன் தேயிலை நிறுவன ஆதரவுடன் பிளாக் டீ அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வு சுமார் 33 வயதிலிருக்கும் ஆரோக்கியமான 19 ஆண்களிடம் நடத்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 5 முறை பால் சேர்க்காத நறுமணப்பொருள்கள் சேர்க்கப்பட்ட தேநீர் கொடுக்கப்பட்டது. ஒருவாரம் இதேபோல் கடைபிடிக்கப்பட்டது. இதனால் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் நாளடைவில் நறுமணப் பொருள்கள் அடங்கிய உணவு, பானங்களை ஒதுக்கிவிட்டு பால் சேர்க்காத தேநீரையே விரும்பி அருந்துகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. பால் சேர்க்காத தேநீர் அருந்துவது ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்த நாளங்களின் மீள்தன்மையை அதிகரிக்கின்றன.

தினமும் ஒருவேளை பால் சேர்க்காத தேநீர் அருந்தினால் இதயநாளங்கள் வலுப்படும் எனப் பேராசிரியர் கிலாடியோ ஃபெரி தெரிவித்தார். உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்களால் அருந்துவது தேநீர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!

நாவல் பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச பழம். எங்க ஊருல நவ்வாப்பழம்னு பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆத்தோரமா வளந்திருக்குற நாவல் மரங்கள்ல போட்டி போட...