Monday, July 26, 2010

பன்றிக்காய்ச்சலை இஞ்சி,வெங்காயம், பூண்டு குணப்படுத்தும்

பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவுகிறது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இடைவிடாத சளி, இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளது. இது ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தொற்று நோய்.

முதன் முதலில் மெக்சிகோ நாட்டில்தான் பன்றிக்காய்ச்சலுக்கான நோய் கிருமி உருவானது. நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கிருந்து காற்றின் மூலம் மற்ற உலக நாடுகளுக்கும் பரவியது.

இந்த நோய் தாக்கப்பட்ட மனிதன் இருமல், தும்மல் மூலம் நிமோனியா காய்ச்சலுக்கு ஆளாகிறான். பிறகு நுரையீரல் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழுக்க ஆரம்பிக்கும்.

பன்றி காய்ச்சலுக்கு டேமி புளு மாத்திரை எடுத்துக்கொண்டால் நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று ஆங்கில மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கான தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை.

பன்றிக்காய்ச்சல் தாக்கினால் பயமோ, பதட்டமோ தேவை இல்லை. 7 நாட்களுக்கு கண்டிப்பாக அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்தால் அதன் பிறகு தாக்கம் குறைந்து விடும்.

இதற்கிடையே சித்த மருத்துவத்தின் மூலம் பன்றிக்காய்ச்சலை வரும் முன்னே தடுத்து விடலாம் என்று அரும்பாக்கம் மத்திய அரசு சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய உதவி இயக்குநர் டாக்டர் ஜெகஜோதி பாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

பன்றிக்காய்ச்சல் வைரஸ் கிருமியானது சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலாலும், நோய், எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களிடமும் இந்த வைரஸ் எளிதில் தொற்றி விடும்.

உடலில் சளி பிடிக்காமல் இருப்பதன் மூலம் வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். ஆடா தொடா, அரசை, அதி மதுரம், கண்டங்கத்திரி, திப்பிலி போன்றவை மார்பு சளியை வெளியேற்றும் தன்மை கொண்டவை.

என்றாலும் சளி பிடிக்க விடாமல் தடுக்கும் சிறப்பு மருத்துவ குணம் இஞ்சிக்கு மட்டுமே உண்டு. உணவில் அதிக அளவில் இஞ்சி, சுக்கு, வறுத்த வேர்க்கடலை, முந்திரி, அக்ரூட், பாதாம், பூமி சர்க்கரை கிழங்கு, பூனைக்காலி அமுக்ராங் கிழங்கு போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதன் மூலம் சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை சித்த மருத்துவத்தில் அதிகாரப்பூர்வ மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் பன்றிக்காய்ச்சலை தடுக்கும் அற்புத மருந்துகள் இயற்கை மூலிகைகளில் கிடைப்பதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறியுள்ளனர். அவர்கள் தெரிவித்து இருப்பதாவது:-

பன்றிக்காய்ச்சல் நோய் தாக்காமல் இருக்க இந்திய இயற்கை மூலிகைகளான வேம்பு, துளசி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்ந்து வர வேண்டும். இவை உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. ஆங்கில மருந்துகளை சாப்பிட்டபோதும் இயற்கை மூலிகைகளை சாப்பிட்டு வரலாம்.

வேம்பு நீரிழிவு நோயை தடுப்பதுடன் வைரஸ் கிருமிகள் மனிதனை தாக்காமல் எதிர்ப்பு சக்தியாக செயல் படுகிறது. காய்ச்சலையும் குறைக்கும். ப்ளு காய்ச்சல், தொண்டை வறட்சி, சளி, அலர்ஜி, தோல் வியாதிகள், மலேரியா போன்றவற்றுக்கு வேம்பு ஒரு தீர்வாகும்.

மற்றொரு இயற்கை மூலிகையான துளசி பாக்டீரியாக்களை கொல்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

வெங்காயத்தில் பல்வேறு வைரஸ் எதிர்ப்பு ரசாயன பொருட்கள் உள்ளன. தேவைப்படும் போதெல்லாம் அவற்றை சாப்பிடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.

இதேபோல் பூண்டும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. பாக்டீரியா வைரஸ்களை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உள்ளது. ரத்தத்தை சுத்தி கரித்து இலகுத்தன்மையாக்குகிறது.

இது தவிர பன்றிக்காய்ச்சல் வராமல் தப்பிக்க அனைத்து வகையான மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறி உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

மாமிச உணவு தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸ் எளிதில் தாக்கும் ஆபத்து உள்ளது.

இவ்வாறு ஆயுர்வேத நிபுணர்கள் கூறி உள்ளனர்.

No comments:

சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!

நாவல் பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச பழம். எங்க ஊருல நவ்வாப்பழம்னு பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆத்தோரமா வளந்திருக்குற நாவல் மரங்கள்ல போட்டி போட...